search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே வாரியம்"

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக சமைக்கப்பட்ட உணவை ரெயில்களில் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
    சென்னை:

    கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் கட்டுக்குள் இருப்பதைத் தொடர்ந்து ரெயில்வே துறையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    ரெயில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து சிறப்பு ரெயில்களும் வழக்கமான பெயரில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புறநகர் மின்சார ரெயில்களில் எந்த நேரமும் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டது.

    நாடு முழுவதும் ரெயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. நிறுத்தப்பட்டு இருந்த பயணிகள் ரெயில் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சமைக்கப்பட்ட உணவு நிறுத்தபட்டிருந்தது. தொற்று பரவல் காரணமாக ரெயில் பெட்டிகளில் உணவு தயாரிப்பது நிறுத்தப்பட்டது.

    தற்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வைத் தொடர்ந்து உணவு வழங்குவதற்கும் இருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் ரெயில் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு மீண்டும் வழங்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    ரெயில்


    இதுகுறித்து இந்திய ரெயில்வே உணவு, சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி.) ரெயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக சமைக்கப்பட்ட உணவை ரெயில்களில் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலைமை சீராகி வருவதால் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு விநியோக சேவையை மீண்டும் தொடங்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    உடனடியாக சாப்பிடக்கூடிய உணவு விநியோக சேவையையும் ஐ.ஆர்.சி.டி.சி. தொடங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்கள் இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. #Diwalibonus #RailwayEmployees
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டும் அதே போன்று 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரெயில்வே சங்கங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பான முன் மொழிவுக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.


    இது தொடர்பாக இந்திய ரெயில்வே ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் எம்.ராகவய்யா கூறுகையில், ‘‘கடந்த ஆண்டில் ரெயில்வே ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் 1,161 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்தது. எனவே 80 நாள் சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனாலும் 78 நாள் சம்பளத்தை போனசாக பெறுவதற்கு ஒப்புக்கொண்டோம்’’ என்றார்.

    ரெயில்வே துறையில் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2000 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. #Diwalibonus #RailwayEmployees
    மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து ரெயில் பெட்டிகளிலும் தூய்மை இந்தியா சின்னத்துடன், இந்திய தேசிய கொடியை வரைய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது. #MahatmaGandhi #IndianRailway #SwachchBharat
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் அனைத்து அரசு துறைகளும் கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள தூதரக அலுவலகங்களிலும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாட கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    அதன்படி இந்திய ரெயில்வே துறை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. அந்த வகையில் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் தூய்மை இந்தியா சின்னத்துடன், இந்திய தேசிய கொடியை வரைய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.



    மேலும் டெல்லி, மும்பை, லக்னோ, சூரத், பெங்களூரு உள்ளிட்ட 43 ரெயில் நிலையங்களில் அக்டோபர் முதல் அடுத்த 6 மாதங்களுக்கு ஒவ்வொரு தலைப்பிலும் வாசகங்கள் இடம் பெறவும், பூரி, அமிர்தசரஸ் ஹரித்துவார் உள்ளிட்ட 28 ரெயில் நிலையங்களை மிகவும் தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரம், அமைதி, தன்னார்வ சமூக சேவை, இன ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய தலைப்புகளில் வாசகங்கள் 43 ரெயில் நிலைங்களில் இடம் பெற இருக்கின்றன.  #MahatmaGandhi #IndianRailway #SwachchBharat
    ரெயில்வே டெண்டர்கள் குறித்த விவரங்கள் இனி ஆன்லைன் மூலமே தெரிவிக்கப்படும் எனவும், செய்தித்தாள்களில் விளம்பரம் இல்லை எனவும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. #RailwayBoards
    புதுடெல்லி:

    ரெயில்வே துறையில் விடப்படும் டெண்டர்களின் விவரங்களை செய்தித்தாள்களில் வெளியிடும் வழக்கத்தை கைவிட ரெயில்வே துறை தற்போது முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,  செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் மூலம் டெண்டர் விளம்பரங்கள் அளிப்பதனால் ஏற்படும் அதிகப்படியான செலவை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் டெண்டர் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RailwayBoard
    வெளிநாட்டு பயணிகள் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய 365 நாட்களுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. #TrainTicketBooking #ForeignTourist
    புதுடெல்லி:

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் வாயிலாக தினமும் லட்சக்கணக்கான உள்நாட்டு பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதற்காக ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தற்போது வெளிநாட்டு பயணிகள் 120 நாட்களுக்கு முன்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதை 365 நாட்களுக்கு, அதாவது 1 ஆண்டுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாட்டு பயணிகள் இனி 365 நாட்களுக்கு முன்பே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பாஸ்போர்ட் நம்பர், சர்வதேச மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும். பயணத்தின்போது அசல் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்றார். 
    ×